தேனும் தமிழும் (பகுதி 1): கனிந்த மனம் இரண்டாம் பாகம் (Tamil Edition)

200.00

Description

Price: ₹ 200.00
(as of Nov 21,2020 16:32:44 UTC – Details)

jPjiA4C

தேனும் தமிழும்..

கனிந்த மனம் கதையின் இரண்டாம் பாகம். இதில் முதல் பாகத்தின் துணை கதாபாத்திரங்களான வேலு, வேணி, கர்ணா, ஜெயந்தி, காசி, மீராவிற்கு முதலில் பார்த்த வரனான குமரன்.. இவர்களுடன் இன்னும் சிலர் கதையின் முக்கிய பாத்திரங்களாக மாறுகின்றனர்.

நாயகன் நாயகி என்று இதில் எவருமில்லை கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நாயகன் நாயகிகள் தான். இவர்களுடன் மீரா கிருஷ், விஷ்வா கங்கா தங்களின் வாரிசுகளோடு இந்த பாகத்திலும் பயணிக்கின்றனர். இந்த கதையில் முதல் பாகத்தின், முடிவு அறியப்படாத அரசநல்லூரில் நடந்த வேலுவின் பஞ்சாயத்து, வேலு வேணிக்கு முடிச்சிடப்பட்ட திடீர் திருமணம், அதற்கான காரணங்கள், அத்தோடு வேலு தன் காதலை வேணியிடம் தெரிவித்தானா? வேணி ஆடவனின் மனம் அறிந்து, அதை ஏற்றாளா?

கர்ணாவின் காதலுக்கு ஜெயந்தியின் பதில் என்ன? அதை அறிந்தால் ஜெயந்தியின் தமையன், காசியின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?

சென்ற கதையில் முதல் அத்தியாயத்தில் கங்காவின் கணவனுக்கு.. கும்ப மரியாதை செய்வதாக வாக்களித்த மீரா, அதை செய்தாளா? ஊரார் அதனை ஏற்றனரா? என்ற கேள்விகளுக்கான விடையினையும்..

கதையின் தலைப்பிற்கு உரிமையாளர்களான தேனும் தமிழும் யார் யார்? அவர்களின் குடும்பப் பின்னணி, அவர்களுக்கிடையேயான அன்பு, புரிதல், உறவு, உண்மை, பொய், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், விட்டுக்கொடுத்தல், கோபம், ஏக்கம், காத்திருப்பு, பயம், காதல் போன்றவற்றை கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்..

தேன் தமிழ் இரண்டும் (காதல் உறவு அன்பு) பொதுவானது.
தேன் தூய்மையானது, திகட்டாதது..
தமிழ் அமரத்துவம் வாய்ந்தது, பிரதிபலன் எதிர்பாராத அன்பும் அப்படியானதே..

குறிப்பு: இக்கதை முதலாம் பாகத்தில் நடந்த நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு நிகழ்வும் முதல் கதையின் கதாபாத்திரங்களோடு பிணைக்கப்பட்டிருக்கும். அதனால் முதல் பாகத்தை மறந்தவர்கள், அதன் நாயகன் நாயகியான மீரா கிருஷ் திருமணத்தில் இருந்து.. அதாவது (புரிதலுக்காக) அத்தியாயம் 52 இல் இருந்து வாசித்துவிட்டு இக்கதையை தொடரவும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தேனும் தமிழும் (பகுதி 1): கனிந்த மனம் இரண்டாம் பாகம் (Tamil Edition)”

Your email address will not be published.